திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் (குட்டித்தம்பி)
தோற்றம்: 08 பெப்ரவரி 1950 - மறைவு: 02 ஏப்ரல் 2025
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நெடியகாடு கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - நேசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை (பெரியமணி) - நாகபிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
நாகேஸ்வரி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா, திருசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரானந்தம், சிவானந்தம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
