திருமதி. சிவப்பிரகாசம் சிவபாக்கியம்

(ஓய்வு பெற்ற ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்)

சிவப்பிரகாசம் சிவபாக்கியம்

தோற்றம்: 03 மார்ச் 1935 - மறைவு: 23 டிசம்பர் 2020

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவபாக்கியம் அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் சேதுநாயகம் தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீபால கிருஷ்ணமூர்த்தி, திலகவதி, திரி புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பத்மலோசினி, கணேசன், சிங்கமாம்பாணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கஜன்(லண்டன்), சிவநந்தினி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
 
காலஞ்சென்ற சுதாகரன், சுஜீதரன், நந்தன், சுகந்தன், கஸ்தூரி, கரிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ரேணி, சிவரூபி, சுதாகர், சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
இனியா, ஈகன், யஸ்வினி, ஆதிரன், அஞ்சயன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கொத்தியாவடி இந்து மைதானத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கஜன் - மகன் 
திலகவதி - சகோதரி Mobile : +94 77 923 17474  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2020 06:05)