Mr. Sivapragasam Thiyagarajan
Date of Birth: 01 September 1965 - Deceased: 29 April 2024
கொழும்பு, விவேகானந்தா மேடு காளியப்பா தொடர்மாடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் தியாகராஜன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற துரைசாமி (கலா ஜீவலர்ஸ் - செட்டியார் தெரு) - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
கல்யாணி அவர்களின் அன்புக்கணவரும்,
லிரணியாவின் அன்புத்தந்தையும்,
தனலட்சுமி வேலுச்சாமி (இந்தியா), கனகரட்ணம் (ஹகாஷ் ஜீவலரி - வௌ்ளவத்தை), காலஞ்சென்ற கலாதேவி, ராஜிசிவம் (அப்சராஸ் - கொழும்பு) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
கோபாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், கண்ணன், அசோகன் ஆகியோரின் மைத்துனரும்,
வேலுச்சாமி (இந்தியா), வேலுச்சாமி (ஶ்ரீராம் டெக்ஸ்டைல்), சாவித்திரி கனகரட்ணம், சரவணகுமாரி, ராஜிசிவம் ஆகியோரின் மச்சானும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், அரசநாயகம், மகாதேவன் (இந்தியா) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, கல்யாணி (கலஹா), கல்யாணி (இந்தியா), காலஞ்சென்ற ரட்ணவேல், திருமதி. ராஜேஸ்வரி, மருதப்பன், விஜயலட்சுமி (இந்தியா) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் அங்குசாமி, செல்லசாமி முத்துராக்கு, சுப்பைய்யா லட்சுமி மற்றும் திரு.திருமதி சுப்பிரமணியம் ராகினி, காலஞ்சென்றவர்களான பஞ்சவர்ணம் கஸ்தூரி, அய்யாதுரை மற்றும் திருமதி விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான மணி ருக்குமணி, கணேஷ் மற்றும் திருமதி. மாரி, திரு. ரட்ணம் (லண்டன்), ஆகியோரின் பெறாமருமகனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் A.F. Raymond Borlla Parlour-1 இல் அஞ்சலிக்கா வைக்கப்பட்டு 01-05-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, 2.00 மணியளவில் பொரளை கனத்தை புதிய தகனக்கிரியை மேடையில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
