Mrs. Sivarajah Selvarani
Date of Birth: 22 May 1958 - Deceased: 14 October 2025
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா செல்வராணி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா - காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வராசா, ஜெயலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை - முல். இருட்டு மடு அ.த.க பாடசாலை), வளர்மதி (சுவிஸ்), ஷேதீஸ்வரன் (இலண்டன்), விவேகானந்தி (பிரான்ஸ்), விவேகானந்தன் (பிரான்ஸ்), ஆதித்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஶ்ரீபிரியா, நந்தகோபன் (இலண்டன்), பானுகோபன் (பிரான்ஸ்), வேணுகோபன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
செல்வகுமார், ஜனனி, எலோஜி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவரஞ்சிதம், கிருஷ்ணகுமார், தெய்வேந்திரன் (சுவிஸ்), புஸ்பலதா (இலண்டன்), விக்னேஸ்வரன் (பிரான்ஸ்), சுந்தரமலர் (பிரான்ஸ்), மதிஷா (பிரான்ஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம், இராசலட்சுமி, காலஞ்சென்ற சிவபாலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேஜா, அக்சரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
