Mr. Sivarasa Nikasan

(BA, LLB சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும், நீதிவான் நீதிமன்றம் பருத்தித்துறை))

Sivarasa Nikasan

Date of Birth: 03 June 1986 - Deceased: 17 March 2026

யாழ். அல்வாய் மனோகரா பாக்கிய பவனத்தைப் பிறப்பிடமாகவும், கருணாலயாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவராசா நிகாசன் அவர்கள் 17-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவராசா (உரிமையாளர் - நிமலன்ஸ் மின்னகம், கிளிநொச்சி) - சந்திரா தம்பதியினரின் நான்காவது புத்திரனும், கருணைவேல் - கௌரி (இலண்டன் ) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஸ்வேதிகா (ஆசிரியை - யாழ். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஜித், பிரணித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிமலன் (ஆசிரியர் - யாழ். ஹாட்லிக் கல்லூரி), நிரஞ்சன் (நிமலன்ஸ் மின்னகம், கிளிநொச்சி), நிரோஜன் (ஆசிரியர் - யாழ். புனித அந்தோனியார் கல்லூரி - ஊர்காவற்துறை), நிதர்சன் (CSIAP Project, Ministry of Agriculture -Senior Technical Officer, Director of Maze Engineering (Pvt) Ltd) சகோதரனும்,

சாகித்தியா (இலண்டன்), தாரகா (இலண்டன்), சஞ்சிதன் (கணக்காளர் - UAE), கௌசிகா, தனுஷா, றொசானா ஆகியோரின் மைத்துனரும்,

வினோத் (இலண்டன்), டேவிட் (இலண்டன்) ஆகியோரின் சகலனும்,

றனீத், ஆருத்ரா, அஜீஸ், சாஜீஸ், லோஷித், மேஹித் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சங்கீர்த், சபிஷ்னா, நிஷ்வந், சேயோன், மகிஷாயினி, ரியா ஆகியோரின் பெரிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வீ.செல்வநாதன் (ஓய்வு நிலை வங்கி முகாமையாளர்), வீ.விஸ்வநாதன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) மற்றும் வீ.ரங்கநாதன் (ஆசிரியர் - யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி), வீ.திவ்யநாதன் (புள்ளி விவர உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் -யாழ்ப்பாணம்), ஸ்ரீசத்தியகலா, காலஞ்சென்றவர்களான க.தர்மலிங்கம், க. நற்குணம் மற்றும் க.செல்வரட்ணம் ஆகியோரின் பெறாமகனும்,

அ. சந்திரராசா, அ.சத்தியதாசன் காலஞ்சென்ற சௌந்தரதாசன், அ.சபேசன், வா.துளசி (ஆசிரியை - திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), சு.கஸ்தூரி (ஆசிரியை -கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி), க.இராசமணி, த.மகேஸ்வரி, ப.இராஜேஸ்வரி, ந.ஆனந்தவேல் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2026 21:17)