திருமதி. சிவராசா விமலராணி

சிவராசா விமலராணி

மறைவு: 23 செப்டம்பர் 2026

யாழ். கரவெட்டி மத்தி மத்தொனியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவராசா விமலராணி அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு (தில்லையம்பல பிள்ளையார் பூசகர்) - சரஸ்வதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற வீரகத்தி - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

யோகபவானி, சுதாஜினி, சுதாகரன், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதேவன், சுரேஷ், அனுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுகிர்தன், சுகிர்தா, இலக்கியா, லக்‌ஷன், லக்‌ஷனா, பானுசன், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2026 00:00)