Mr. Sivasambu Sivaraman

(பிரபல நெசவு ஆலை, நேசன் தொலைதொடர்பு நிலைய - உரிமையாளர்)

Sivasambu Sivaraman

Deceased: 05 December 2024

யாழ். காரைநகர் சந்தம் புளியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சிவராமன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவநாயகம், மகேஸ்வரி, சிவராசா, சிவலிங்கம், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2024 05:00)