Mr. Sivasampu Vaigunthavasan

Sivasampu Vaigunthavasan

Deceased: 05 May 2024

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கைலாச பிள்ளையார் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு வைகுந்தவாசன் அவர்கள் 05-05-2024  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி-செல்வமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாலினி (Pharmacist-லண்டன்), கிருசாந்தன் (பொறியியலாளர்), Dr. லலிதாம்பிகா (யாழ் போதனா வைத்தியசாலை), கிருசாந்தி (Civil Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் கோம்பையன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2024 04:00)