திரு. சிவசாமி தனபாலசுந்தரம்
தோற்றம்: 19 அக்டோபர் 1963 - மறைவு: 05 செப்டம்பர் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசாமி தனபாலசுந்தரம் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி - கமலேஸ்வரி தம்பதியனிரின் அன்பு மகனும்,
மனிகயே (இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன் (இத்தாலி), ஸ்திவன் (இத்தாலி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெபோரா (இத்தாலி) அவர்களின் பாசமிகு பேரனும்,
சுந்தரேஸ்வரி, கோகிலேஸ்வரி, தேவபாலன், சத்தியபாலன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல - 9/1, அரசடி ஒழுங்கை,
தட்டாதெரு, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
