Mr. Sivasithamparam Krishnananthan

(முன்னாள் பணிப்பாளர் - முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களம் - வடக்கு கிழக்கு மாகாணசபை)

Sivasithamparam Krishnananthan

Date of Birth: 22 September 1946 - Deceased: 13 January 2025

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணானந்தன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சிவசிதம்பரம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா (கட்டடங்கள் திணைக்களம் - வடமாகாணம்), பிரவீனா (வலயக்கல்வி திணைக்களம் - வவுனியா தெற்கு), கபில்தேவ் (திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவதாரணி (ஆயுள்வேத வைத்தியர்), கருணாநிதி (சிறுவர் நன்னடத்தை திணைக்களம் - வவுனியா), பிரமோதனி (ஆசிரியர், திஸ்ஸ மகாவித்தியாலயம் - திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரீத்திகை, ஹர்ஷா, கனுஷ், கிஷோபி, வெஜான் கௌஷால், ஜெனுல் கேய்ஜான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பத்மாசனி, லட்சுமிகாந்தன் காலஞ்சென்றவர்களான  புஷ்பராணி, இந்திராணி, உமாகாந்தன், சத்தியபாமா மற்றும் மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2025 05:00)