திருமதி. சிவசோதி செல்வரட்ணம்
தோற்றம்: 22 நவம்பர் 1941 - மறைவு: 18 நவம்பர் 2025
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி செல்வரட்ணம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா - தங்கம்மா தம்பதியினரின் ஆசை மகளும்,
காலஞ்சென்ற சோமஸ்கந்தசாமி - கனகம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,
செல்வரட்ணம் (கொழும்பு கொட்டாஞ்சேனை ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
காலஞ்சென்ற வடிவம்மா, குனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகசபை (றீகல்), அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. இராஜேந்திரனின் மைத்துனியும்,
சுரேந்திரன், மதிவதனி (இந்தியா), ஜெயவதனி (யசோ-சுவிஸ்), சுதாகரன் (ராஜன்-இங்கிலாந்து), சுகிந்திரன் (பவா-சுவிஸ்), சுபைதரன் (தம்பி-சுவிஸ்), சந்திரவதனி (சியாமளா-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க அன்னையும்,
பத்திரிசியா, முருகதாஸ், பிரேம்ராஜ், ரஜனி, சுபாஜினி, கவிதா, பகீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீதன், மயூரி, உஷா, ராகினி, பார்த்தீபன், காண்டீபன், பிருந்தன் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,
கோபிகா, மித்திரன், வர்ஷிகா, இஷான் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-11-2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சுப்ரிம் மலர்ச்சாலை (இல-02, எவிட்டிகல மாவத்தை, பொரளை) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
