சிவஶ்ரீ. பரமேஸ்வர பத்மநாதக் குருக்கள் (B. Sc)
மறைவு: 09 நவம்பர் 2025
யாழ். ஆவரங்காலை பிறப்பிடமாகவும் கம்பளை, மற்றும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டவரும் ஓய்வு நிலை ஆசிரியை ஸ்ரீமதி. மகாலக்ஷ்மி அவர்களின் கணவருமான சிவஸ்ரீ . பரமேஸ்வர பத்மநாதக் குருக்கள் அவர்கள் 09/-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், கம்பளை சாஹிரா கல்லூரியின் முன்னை நாள் ஆசிரியரும், கம்பளை முத்துமாரி அம்மன் மகாவித்தியாலய முன்னாள் அதிபரும், கம்பளை கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முன்னை நாள் பிரதம குருவும் ஆவார்.
அமரர் பத்மநாதக் குருக்கள் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம்.
டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
