திருமதி. சிவசுப்பிரமணியம் கருணாகடாட்சி (சாந்தக்கா)
தோற்றம்: 31 டிசம்பர் 1931 - மறைவு: 09 பெப்ரவரி 2023
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கருணாகடாட்சி (சாந்தக்கா) அவர்கள் 09.02.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்தபிள்ளை சிவபாக்கியம் தம்பதியினரின் புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,
சிவசுப்பிரமணியம் மற்றும் காலஞ்சென்ற முத்துகுமாரசாமியின் பாசமிகு மருமகளும்,
சந்திரசேகரம் (கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான குகஞானாம்பாள், சதாநந்தசிவம், சிவப்பிரகாசம், விஜயரட்ணம், குமாரசுவாமி, கந்தப்பசேகரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் மங்கையற்கரசி, கிருபாலினி ஆகியோரின் மைத்துனியும்,
நகுலேஸ்வரியின் பாசமிகு தாயாரும்,
வைத்தியர் தயாசிவத்தின் அன்பு மாமியாரும்,
சிவசங்கர் (நிர்வாக இயக்குநர் - சங்கரா தொழில்நுட்ப நிறுவனம்) - சிவதேவி, Dr. கோபிசங்கர் (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலை) - நிலானி (ஆசிரியை சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), Dr. உமாசங்கர் (பேராசிரியர் றொவான்ஸ் பல்கலைக்கழகம், நியூஜேர்சி, அமெரிக்கா) - பத்மரூபி, Dr. உதயசங்கர் (சிரேஷ்ட விரிவுரையாளர், மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சயந்தவி, மதுவந்தி, அபிநயா, சுவாஸ்தி, மனஸ்வினி, திரிநேத்திரி, அக்சயன் மற்றும் வர்மன் ஆகியோரின் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.02.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு 68/3 வஜிரா வீதி கொழும்பு 5 இல் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11.30 மணியளவில் கனத்தை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
68/3 Vajira Road Colombo 05.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2023 11:40)
