திரு. சிவசுப்பிரமணியம் சுகுமார்(மகான்)
தோற்றம்: 16 ஆகஸ்ட் 1958 - மறைவு: 21 மே 2024
யாழ். வட்டுக்கோடை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சுகுமார் அவர்கள் 21-05-2024 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் - லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தினேஷ், சந்தோஷ், கபிலாஷ், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சபினா, நிமாலினி, அஞ்சலிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவகுமார், காலஞ்சென்ற தேவகுமார், விஜயகுமார், சூரியகுமார், காலஞ்சென்ற சாந்தகுமாரி, நந்தகுமார், வசந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நாகநந்தினிபாமினி, பவானிதேவி, சத்தியகலா, கிருபாநந்தன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், பாலகணேசன், பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலா, சச்சின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் புகழுடல் வியாழன், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-05-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 3.00 மணியவில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2024 05:49)
