திரு. சிவசுப்பிரமணியன் குணசீலன்

சிவசுப்பிரமணியன் குணசீலன்

தோற்றம்: 14 மார்ச் 1971 - மறைவு: 20 அக்டோபர் 2024

யாழ். அத்தியடி புது வீதியை பிறப்பிடமாகவும், இலண்டன் Northold ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியன் குணசீலன்  அவர்கள் 20-10-24  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்-பராசக்தி (இலங்கை) தம்பதியினரின் அன்பு மகனும்,

தவராசா- சரோஜினிதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவதர்சினி (தர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுரா, விஷ்னோத் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சத்திய சீலன் (இலண்டன்), சாவித்திரி தேவி (இலங்கை), ஜெயசீலன் (இலண்டன்) பேபி (இலங்கை), வசந்தி (இலண்டன்), சுகந்தி (பிரான்ஸ்), சாந்தி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அமுதா (இலண்டன்), பத்மாவதி (இலண்டன்), காலஞ்சென்ற  நாகேஸ்வரன், அமலதாஸ் (இலண்டன்), ராஜா (பிரான்ஸ்), நிமால் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

ரஜினி (ஜேர்மனி), நளினி (கனடா), அருள் (கனடா), ஜனா (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

ஜோன்சன் (ஜேர்மனி), பாபு (கனடா), லோஜிகா (கனடா), ஜெயந்தன் (கனடா) ஆகியோரின்  சகலனும் ஆவார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00-2.00 மணி வரை Hendon Cemertery & Crematorium (Holdec Hill Road, London NW7 1NB) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும், தொடர்ந்து பிற்பகல் 3.15-6.00 மணி வரை Waiting Community Centre (145 Orange Hill Rd, Edgware HA8 OTR) இல் விருந்துபசாரம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)