திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி
மறைவு: 23 ஜூலை 2024
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல்-லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான பழனியர் சின்னத்தம்பி-தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சிவசுப்பிரமணியம் (E.N.T Surgen) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகுமார், பவானி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஞானசோதி, Dr. கேதீஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,
திருவேணி, வைஷ்ணவி, சர்வேஸ், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சுந்தரலில்கம், தியாகலிங்கம், கெங்காதரன், காலஞ்சென்ற சத்தியதேவன் ஆகியோரின் சகோதரியும்,
திலகவதி, காலஞ்சென்ற தவமணி, தனலக்சுமி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி :-
96.1.குறுக்குதெரு,
யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
