திரு. சிவசுப்பிரமணியம் கனகசபை

(Air Lanka உத்தியோகத்தர், கனடா CIBC வங்கி உத்தியோகத்தர்)

சிவசுப்பிரமணியம் கனகசபை

தோற்றம்: 23 நவம்பர் 1956 - மறைவு: 15 செப்டம்பர் 2024

யாழ். புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மார்க்கம்-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் கனகசபை அவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால்  இங்கிலாந்து விமான நிலையத்தில் [Heathrow Airport] 15-09-2024 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மாகோ சின்னத்தம்பி-சின்னத் தங்கம் தம்பதியினரின் அன்புப் பேரனும்,

கனகசபை [மாகோ]-கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனாரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை [முன்னாள் காவல்துறை அதிகாரி]-சிவசோதியம்மா [கனடா] தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவீனா [CPA], சஞ்சய் [LAWYER] ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

செரின் அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலசுப்ரமணியம் [கலசம்பாலா], திருமதி யோகேஸ்வரி, மகேஸ்வரி, செந்தில்முருகன் [முன்னாள் கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர்], சிறி முருகன் [பிரான்ஸ்] ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

லிங்கராஜா [அவுஸ்திரேலியா), உதயகுமார் [கனடா], சுனந்தா [அவுஸ்திரேலியா], குகதாசன் [கனடா], சசிகலா, கலாநிதி பாலசிவகடாச்சம், குகதாசன், காலஞ்சென்ற கோமளநாயகி, சிவகாந்தரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரி இறுதி நிகழ்வுகள் 28-09-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre [8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada] இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00-10:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery [12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada] இல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2024 04:00)