Mr. Sivasubramaniyam Kanagasabai
(Air Lanka உத்தியோகத்தர், கனடா CIBC வங்கி உத்தியோகத்தர்)
Date of Birth: 23 November 1956 - Deceased: 15 September 2024
யாழ். புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மார்க்கம்-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் கனகசபை அவர்கள் இங்கிலாந்து சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் இங்கிலாந்து விமான நிலையத்தில் [Heathrow Airport] 15-09-2024 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மாகோ சின்னத்தம்பி-சின்னத் தங்கம் தம்பதியினரின் அன்புப் பேரனும்,
கனகசபை [மாகோ]-கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனாரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை [முன்னாள் காவல்துறை அதிகாரி]-சிவசோதியம்மா [கனடா] தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரவீனா [CPA], சஞ்சய் [LAWYER] ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செரின் அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலசுப்ரமணியம் [கலசம்பாலா], திருமதி யோகேஸ்வரி, மகேஸ்வரி, செந்தில்முருகன் [முன்னாள் கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர்], சிறி முருகன் [பிரான்ஸ்] ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
லிங்கராஜா [அவுஸ்திரேலியா), உதயகுமார் [கனடா], சுனந்தா [அவுஸ்திரேலியா], குகதாசன் [கனடா], சசிகலா, கலாநிதி பாலசிவகடாச்சம், குகதாசன், காலஞ்சென்ற கோமளநாயகி, சிவகாந்தரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரி இறுதி நிகழ்வுகள் 28-09-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre [8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada] இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00-10:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery [12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada] இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
