திரு. சிவசுப்பிரமணியம் குமாரதாசன்

சிவசுப்பிரமணியம் குமாரதாசன்

தோற்றம்: 22 செப்டம்பர் 1962 - மறைவு: 24 பெப்ரவரி 2025

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், Bios-Colombes - பிரான்ஸ், Illford - பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் குமாரதாசன் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் (அதிபர் - மல்லாகம் மகா வித்தியாலயம்) - சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா (இன்சூரன்ஸ் - அல்வாய்) - சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

யோகேஸ்வரி (பாபி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிசன், வருணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உஷா (பிரான்ஸ்), பிரபா (பிரித்தானியா), சிவதாசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

குகதாஸ் (பிரித்தானியா), பிருந்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

ரமணன் (பிரித்தானியா), பிரகாமி (நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு உடன்பிறவா சகோதரனும்,

ஜெயகுமார் (பிரான்ஸ்), வாமதேவன் (பிரித்தானியா), சுகந்தி (பிரான்ஸ்), விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், புவனேஸ்வரி, விமலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், குகனேஸ்வரன், சிவனேஸ்வரன் (இலங்கை), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிச்சாட், சோதியா, நிதர்சன், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

ராகவி அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-03-2025 புதன்கிழமை மதியம் 1:00 - 3:30 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Road, Ilford IG6 2JL, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் Forest Park Cemetery & Crematorium (Forest Road, Ilford, Hainault IG6 3HP, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2025 05:00)