திரு. சுப்பிரமணியம் சிவபாலநாதன்

(கணக்காளர்)

சுப்பிரமணியம் சிவபாலநாதன்

தோற்றம்: 29 மார்ச் 1950 - மறைவு: 30 நவம்பர் 2024

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், இல-25/3, மகேஸ்வரி லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவபாலநாதன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி சுப்பிரமணியம் (இளைப்பாறிய ஆசிரியர்)-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற K.K.V விசுவலிங்கம்-தெய்வானைப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின்  அன்புக் கணவ௫ம்,

கவிதா, லவதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரராசலிங்கம், ஆனந் ஆகியோரின் மாமனாரும்,

குலம், சாயிஸ்வரி, சாயிரூபிணி, சாயிஸ்சன் ஆகியோரின் அன்பு பேரனும்,

ஞானசிகாமலர், சிவரூபராணி, நற்குணநாதன்,  சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரன், பஞ்சலிங்கம், பத்மா, ராசம்மா காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவக்கொழுந்து, குலரட்ணம், கனகம்மா மற்றும் பரமானந்தம், காலஞ்சென்றவர்களான யோகராணி,  சண்முகம், புவனேஸ்வரி, சோமசுந்தரம் மற்றும் கமலாம்பிகை, பொன்னம்பலம், ராஜேஸ்வரி, செல்வராஜா, திலகவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 02-12-2024 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2024 05:00)