திருமதி. சிவசுந்தரி தனஞ்செயன்
(ஆசிரியை-யாழ். இந்து மகளிர் கல்லூரி)
தோற்றம்: 12 ஜூன் 1934 - மறைவு: 23 ஜூன் 2024
யாழ்.கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, மிசிசாகா-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரி தனஞ்செயன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தனஞ்செயன் (ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. வி. என். கந்தையா (கொழும்பு பிரபல வர்த்தகர்) தம்பதியினரின் அன்புமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து (ஓய்வுபெற்ற தபாலதிபர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஆதித்தன், மங்களா, அனு, கல்பனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாதுமை, நந்தகுமார், புனிதநாதன், நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிரா, சாய்ரா, சினேகன், ஹரி, மகி, மிது, மயூரா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விமலசுந்தரம், காலஞ்சென்ற ஶ்ரீகாந்தா மற்றும் ஶ்ரீபதி, விவேகசுந்தரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாம்பசிவம், கருணாதேவி, மகேஸ்வரி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், நல்லநாதன், மற்றும் சிவலோகநாதன், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையற்கரசி மற்றும் ராஜேஸ், வர்ணலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் முற்பகல் 10:30 வரை St John's Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5) என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு முற்பகல் 10:30 முதல் நண்பகல் 12:00 வரை இறுதிச்சடங்கள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2024 11:44)
