திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)

சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)

தோற்றம்: 23 ஜூன் 1950 - மறைவு: 08 மே 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மயிலிட்டி திருப்பூர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா), சிவறஞ்சன் (பிரான்ஸ்), தேவசேனா (சுவிஸ்), சிவசேனா (சிங்கப்பூர்), சிவகணேஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உமையாள் (அவுஸ்திரேலியா), தயானந்தி (பிரான்ஸ்), தங்கவடிவேல் (சுவிஸ்), சுபேந்திரன் (சிங்கப்பூர்), தயாளினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அச்சுதன், அபி, ஆராதனா, லக்‌ஷனா, தர்ஷனா, யாதவன், ஹரிஷ், அஞ்சனா, அபினா, சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"மனதுருகி பிராத்தனை செய்தாலும் கண்ணீர் விட்டு கதறி ௮ழுதாலும் கொண்டு சென்றவன் திருப்பி தரப்போவதில்லை ஒப்புக்காய் ஒலமிடுங்கள் ௭ன்று ஒசையில்லாமல் ௭டுத்துச் சென்றுவிடுகிறான் ௭வர் ௮னுமதிக்காகவும் ௮வன் காத்திருப்பதில்லை பந்தம் பாசத்திற்கு நடுவே போராடும் பேதை ௨ள்ளங்களுக்கு இவை தெரிந்தும் ஒத்துக்கொள்ள மனசு மறுக்கிறது போகிறபாதை தெரிந்து விட்டால் சாலைமறியல் செய்து போராடலாம் ௮ல்லது வந்தவனை ௮டித்துவிட்டு போன ௨சிரை பிடித்து வரலாம் யாராவது கணடால் கையோடு கூட்டி வரலாம் ௭துவும் தெரியாத போது ௭ங்கே போய் தேடுவது ௭ன்னவென்று சொல்லுவது பாசங்கள் தோற்றுப்போய் விடுகிறது சாவே ௨னக்கு ஒரு சாவில்லையா வந்த சுவடு மறைவதற்குள் போகும் பாதை தெளிவாக தெரிகிறது ஆன்ம சாந்திக்கா பிராத்திக்கிறேன் தாயே சென்றுவாருங்கள் ஜெயக்குமாரின் நட்பு வட்டத்தின் சார்பில் ௨ங்கள் காலடியில் ௭மது கண்ணீர் மலர்களை தூவி சமர்பிக்கிறேன் ௐம் சாந்தி சாந்தி சாந்தி ௨ங்கள் ௮ன்பு மகள் மாலா மற்றும் சக நட்புகள் V.m.m.V"
- Mala (கனடா, 11/05/2025 12:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2025 04:00)