Mrs. Sivasuntharam Pavalaratnam
Date of Birth: 23 June 1950 - Deceased: 08 May 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மயிலிட்டி திருப்பூர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா), சிவறஞ்சன் (பிரான்ஸ்), தேவசேனா (சுவிஸ்), சிவசேனா (சிங்கப்பூர்), சிவகணேஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமையாள் (அவுஸ்திரேலியா), தயானந்தி (பிரான்ஸ்), தங்கவடிவேல் (சுவிஸ்), சுபேந்திரன் (சிங்கப்பூர்), தயாளினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அச்சுதன், அபி, ஆராதனா, லக்ஷனா, தர்ஷனா, யாதவன், ஹரிஷ், அஞ்சனா, அபினா, சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
