Mrs. Sivatharshini Kugaseelan

Sivatharshini Kugaseelan

Date of Birth: 12 July 1979 - Deceased: 07 June 2025

யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், Mississauga - கனடாஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவதர்ஷினி குகசீலன் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், பாலசுந்தரம் - ரதிதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா- பரமேஸ்வரி (அக்காச்சி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குகசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

இலக்கியன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

வேணு, கோபன், சுதர்சன், தாரகா (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2025 04:00)