திருமதி. புவனேஸ்வரி குணரட்ணம்

(ஓய்வுபெற்ற ஆசிரியை, தி /புனித பிரான்ஸ் சவேரியா மகா வித்தியாலயம்)

புவனேஸ்வரி குணரட்ணம்

தோற்றம்: 28 ஜூன் 1953 - மறைவு: 24 ஜனவரி 2025

திருகோணமலை ஆழங்கேணியைப் பிறப்பிடமாகவும், கன்னியா சிவயோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி குணரட்ணம் அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குணரட்ணம் (ஓய்வுபெற்ற அலுவலகர் இறைவரித் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மாலதி (ஆசிரியை - தி- திருக்கோணேஸ்வரா, வித்தியாலயம், பெரியகுளம்), ரமேஸ் (ஆசிரியர் - மட் புனித ஜோசப் கல்லூரி, தன்னாமுனை), மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உமேஸ், வினித்தா (ஆசிரியை - ம/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தட்சாயினி, நிலக்ஷினி (People's Bank, Assurance Staff of Softlogic), துளசிகா, றிப்னாஸ், றிப்சானா ஆகியோரின் அம்மம்மாவும்,

கேஷன்யா (2ம் வருடம்- வவுனியா பல்கலைக்கழகம்), வேதிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27-01-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

முகவரி:-

இல-57, சிவயோகபுரம்

கன்னியா, திருகோணமலை.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 23:21)