திருமதி சிவயோகபாக்கியம் கார்த்திகேசு

சிவயோகபாக்கியம் கார்த்திகேசு

தோற்றம்: 04 டிசம்பர் 1939 - மறைவு: 02 ஜூன் 2022

யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடி G6 ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவயோகபாக்கியம் கார்த்திகேசு அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் கார்த்திகேசு(சுழிபுரம் மேற்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜீவானந்தன், கருணானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஞானபாக்கியம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான சிவஞானரத்தினம்(சிறாப்பர்), சிவயோகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, பரமேஸ்வரி, விசாகப்பெருமாள் மற்றும் காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி, சிவபாதம், வரதராசா, உருத்திரமூர்த்தி, சிவபாலசுப்பிரமணியம், R.S நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-06-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2022 23:58)