திரு. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை
(தமிழறிஞர், கணினி வல்லுநர்)
மறைவு: 24 நவம்பர் 2025
யாழ். ஆவரங்கால் பருத்தித்துறை வீதியை பூர்வீகமாகவும், கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. க. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை அவர்கள் கம்போடியாவில் இடம்பெற்ற - கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற வேளை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 - 12:00 மணி வரை Old Colfeians Rugby Football Club (Eltham Road, London, SE12 8UE) இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Hither Green Crematorium (Verdant Lane, SE6 1TP) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
