திரு. சியாளியாப்பிள்ளை சிதம்பரம்
(ஜினா ஸ்டோர்ஸ் - புசல்லாவ)
மறைவு: 29 ஜூன் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் தேனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சியாளியாப்பிள்ளை சிதம்பரம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுகிழமை அன்று காலை 8:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சியாளியாப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்துப்பிள்ளை (KMK) - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா (இலண்டன்), பிரேமகாந்தன் (இலண்டன்), காலஞ்சென்ற பத்மசியாளன் ஆகியோரின் தந்தையும்,
சுகுமாரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை, செல்லப்பிள்ளை, காலஞ்சென்ற கமலம், மாரியாயி ஆகியோரின் சகோதரரும்,
புவனேஸ்வரியின் உடன்பிறவா சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுகந்தி ஆகியோரின் கொழுந்தனாரும்,
பெருமாள்பிள்ளை (லங்கா ஸ்டோர்ஸ்), பொரவியாப்பிள்ளை (புஸ்பா ஸ்டோர்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை - கண்ணம்மாள் தம்பதியினரின் சம்பந்தியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், புஸ்பராஜ், தில்லைநாதன் (நவீனீஸ்) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
ஹஸ்வந்தனி, ஸ்ரீ சபரி ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-07-2025 புதன்கிழமை காலை 7:30 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:39 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
