ஶ்ரீமதி. சியாமளாதேவி விஜயகுமார்

(இளைப்பாறிய போதனாசிரியர் - சிறு கைத்தொழில், வவுனியா, யாழ்ப்பாணம்)

சியாமளாதேவி விஜயகுமார்

மறைவு: 24 நவம்பர் 2025

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. சியாமளா தேவி விஜயகுமார் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அனுராதபுரம் கதிரேசன் கோயில் பிரதம குருக்கள் சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் - ராஜேஸ்வரி தம்பதியினரின் புத்திரியும், 

விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலமகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவஶ்ரீ கேதீஸ்வரக்குருக்கள், நமசிவாயம், ஜெகதீஸ்வரி மற்றும் யசோதரா, கோமளாதேவி, பத்மாசனி, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-11-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணயளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

விஜயகுமார் (கணவர்):- +94 76 654 2988
யசோதரா (சகோதரி):- +94 71 516 4235

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)