Mr. Sokkalingam Vinayagalingam

(ஓய்வுபெற்ற வட- கிழக்கு இணைந்த மாகாண சபை பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், திறைசேரி அத்தியட்சகர், தேர்தல் உதவி ஆணையாளர், வீடமைப்பு உதவி ஆணையாளர், புத்தளம் உதவி அரசாங்க அதிபர்)

Sokkalingam Vinayagalingam

Deceased: 02 March 2024

யாழ். தென்புலோலியூரைப் பிறப்பிடமாகவும் மாலிசந்தி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் விநாயகலிங்கம் (இளைப்பாறிய வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபை பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service Commission) செயலாளர், திறைசேரி (Treasury) அத்தியட்சகர், தேர்தல் உதவி ஆணையாளர், வீடமைப்பு உதவி ஆணையாளர், புத்தளம் உதவி அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை(தீவுப் பகுதி) மற்றும் கற்பிட்டி பிரதேச காரியாதிகாரி [D.R.O]) அவர்கள் கொழும்பில் 02-03-2024 அன்று சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்-பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

காலஞ் சென்றவர்களான கந்தவனம்-லைலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவியின் அன்புக் கணவரும்,

மேனகா (வைத்திய கலாநிதி - கொழும்பு), சிவபரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

ஜெபநேசன் (வைத்திய கலாநிதி கொழும்பு), பிரகலதா (ராதை-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஷிகா, புஜிதா, ஜஸ்மிதா, ரன்யா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான லிங்கேஸ்வரி, லிங்கநாயகி, தெய்வேந்திரலிங்கம் லிங்கராணி மற்றும் அரியலிங்கம் (இளைப்பாறிய அதிபர்), கிருஷ்ணலிங்கம் (ஒலிபரப்பாளர்-கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (ஆசிரியர்- ஹாட்லி கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்), சிவானந்தம் கருணாநந்தம், மற்றும் பரமேஸ்வரி, கலைச்செல்வி மற்றும் காலஞ்சென்றவர்களான ராஜகுலசிங்கம் (வைத்திய கலாநிதி-California) தர்மகுலசிங்கம் மற்றும் தர்மதேவி, மகேஸ்வரிதேவி, கமலாதேவி, பற்குணதேவி (சந்திரா), செல்வலிங்கம், ஜெயகுலசிங்கம்ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

இறுதிச்சடங்குகள் பற்றிய விபரங்கள்:

பார்வைக்கு / Viewing:-

Tuesday, 5 March 2024   (9.00 AM - 9.00 PM)

Mahinda Florist

291 Galle Rd, Dehiwala - Mt. Lavinia

தகனம் / Cremation:-

Wednesday, 6 March 2024 (10.00 AM)

Mt Lavinia Cemetery

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2024 05:00)