திரு. சொக்கலிங்கம் ஐயாத்துரை

(பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச்சங்க மேற்பார்வையாளர்)

சொக்கலிங்கம் ஐயாத்துரை

தோற்றம்: 29 ஜூலை 1937 - மறைவு: 10 நவம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சொக்கலிங்கம் ஐயாத்துரை அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று காலை சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - நீலாதாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி (வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்திரலிங்கம், கணேசலிங்கம், ஜயந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலவண்ணன், கலைவாணி, தாரகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மிதுசன், மயூரன், கரிகாலன், கரிதரன், பிரகாஷினி, பிரகாஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, இரத்தினகாந்தி, அம்பிகாரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும்,

சத்தியலிங்கம்,சத்தியவேணி, கமலவேணி, பத்மவேணி, ரஞ்சிதவேணி ஆகியோரின் சிறியதகப்பனாரும்,

காலஞ்சென்ற உதயகுமார், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், பிறேம்குமார், சிவகுமார், ராதிகா, மேனகா, கருணைநாதன், காலஞ்சென்ற ஶ்ரீதரன் (சதிஸ்), அரவிந்தன் ஆகியோரின் மாமானரும்,

காலஞ்சென்ற மாணிக்கவேல், ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, பங்கயச்செல்வம்,  நடராஜசுந்நதரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது ஊரிக்காடு இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2025 00:00)