திருமதி. சுலோசனா கெங்கதாரன்

(ஓய்வுபெற்ற உப அதிபர் - யா/சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயம்)

சுலோசனா கெங்கதாரன்

தோற்றம்: 01 பெப்ரவரி 1963 - மறைவு: 15 ஏப்ரல் 2024

யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோசனா கெங்காதரன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - இராசமணி தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் - சிவநேசம் தம்பதியினரின் மருமகளும்,

கெங்காதரன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - வீதி அபிவிருத்தித் திணைக்களம்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாய்ராவின் (மாணவி-யா.வட்டு மத்திய கல்லூரி) அன்புத் தாயாரும்,

பாலரஞ்சன் (லக்ஸ்மி ஸ்டோர்ஸ்-வட்டுக்கோட்டை) அன்புச் சகோதரியும்,

தங்கராணி (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-04-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, புகழ் உடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:

வட்டுதென்மேற்கு,

வட்டுக்கோட்டை.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2024 04:00)