Mr. Somalingam Manoharan

Somalingam Manoharan

Date of Birth: 30 October 1954 - Deceased: 26 December 2024

கிளிநொச்சி - பூநகரி செல்லையா தீவைப் பிறப்பிடமாகவும், ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் மனோகரன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம்-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், மதியானந்தம் (இந்தியா) அவர்களின் பெறாமகனும், கந்தையா-மகேஸ்வரி (இந்தியா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

றதனி (அவுஸ்திரேலியா), தர்சிகன் (கனடா), றஜாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன் (அவுஸ்திரேலியா), சர்மிளா (கனடா), சபேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோஷித் பிரணயா, பிரணியா, அன்பகன், ஆதித்தன், ஆருத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகேஸ்வரி (இலங்கை), இரத்தினவல்லி (இலங்கை), பராசக்தி (இலங்கை), தையல்நாயகி (இலங்கை), சிவயோகன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தியாகராயா, விஜயகாந்தன் (கனடா), யோகேஸ்வரன் (கனடா), சரோஜினி (சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சாந்தினி (இந்தியா), விஜயகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார் (இலண்டன்), உதயகுமாரி (இலண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், சிவகுமார், சிவகுமாரி (இந்தியா), ராஜ்குமார் (இலண்டன்), சதீஸ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் கொள்ளுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

ஆலங்கேணி, பூநகரி.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2024 05:00)