திரு. சோமலிங்கம் இலிங்கநாதன்

சோமலிங்கம் இலிங்கநாதன்

தோற்றம்: 03 ஜூன் 1944 - மறைவு: 21 நவம்பர் 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 362, 4ஆம் யூனிற், திருநகர், யோகபுரம், மல்லாவியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் இலிங்கநாதன் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம் - அன்னம்மா இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர் - கனகம்மா இணையரின் பாசமிகு மருமகனும்,

எம்பிராட்டி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தயாநிதி, தயாளன் (பிரான்ஸ்), சதாளன் (இசைப்பூங்கா கலர் லாப், யாழ்ப்பாணம்), தர்சினி (பாலிநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

வரதராணி (பிரான்ஸ்), சுகந்தினி (பிரான்ஸ்), பிரபாலினி (ஆசிரியை - யாழ். நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்), நகுலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலிநகர் மகாவித்தியாலய மாணவிகளான தபோதினி, அருணவி, அஸ்வினி மற்றும் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் அச்சுதன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆதுர்யா, மதுரன் (பிரான்ஸ்), சங்கவி (பிரான்ஸ்), ஆதுரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரப்பாட்டனாரும்,

கனகரத்தினம், அன்னலட்சுமி, வாலாம்பிகை, காலஞ்சென்ற லோகேஸ்வரி மற்றும் தம்பிராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், யோகநாதன் மற்றும் விஜயலட்சுமி (பாண்டியன்குளம்), பாலகிருஷ்ணன் (சிறி விநாயகபுரம்), கனகேஸ்வரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் சேதுபதி (இராமநாதபுரம்), காலஞ்சென்ற தியாகராசா மற்றும் சியாமளாதேவி (நெடுந்தீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பாலியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2026 00:00)