திருமதி. சோமநாதன் சிவபாக்கியம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக்கல்லூரி, கொரோபோசியா மற்றும் கார்டன் சர்வதேச பாடசாலைகள் பப்புவா நியூகினி)
மறைவு: 03 அக்டோபர் 2025
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமநாதன் சிவபாக்கியம் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமாரசாமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சோமநாதப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சோமநாதன் (முன்னாள் இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர், ஒம்புட்ஸ்மேன் கமிஷன் பப்புவா நியூகினி இயக்குனர்) அவர்களின் அருமை மனைவியும்,
கலாநிதி அபர்ணாவின் (உலக வங்கி) பாசமிக்க தாயாரும்,
கலாநிதி ரண்ணன் எலிய (Institute of Health Policy) அவர்களின் அன்பு மாமியாரும்,
அனன்யாவின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி ருத்ரா, தனபாலசிங்கம் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,
கமலா (இலண்டன்), ரமணி சந்திரபால், சோமதேவா, பாரதி (திருகோணமலை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
