திரு. சோமசுந்தரம் அருள்குமார்

(முகாமையாளர் - The Malayan Trading Company Pvt Ltd)

சோமசுந்தரம் அருள்குமார்

தோற்றம்: 14 நவம்பர் 1955 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026

கொழும்பு-13 கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் அருள்குமார் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப் பிள்ளை - செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்,

சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஷா (Inno data Lanka) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பத்மராணி, லலிதா ராணி, வனிதாராணி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குகதாஸ், செல்வராஜா, சிங்கஅரிய ரட்ணம் மற்றும் பாஸ்கரன் (சிங்கப்பூர்). கிருஷ்ணவேணி, மோகன ராணி (கனடா), லோகேஸ்வரி (ஜேர்மனி), சிவமோகன், ஜெயமோகன் (ஜேர்மனி), யோகேந்திரன், சுஜனி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2026 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் Lanka மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2026 00:00)