Mr. Somasundaram Arunasalam

Somasundaram Arunasalam

Date of Birth: 09 September 1933 - Deceased: 02 September 2025

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனகபுரம் முதலாம் பண்ணை கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் அருணாசலம் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - இலட்சுமி தம்பதியினரின் தவப் புதல்வனும், சின்னத்தம்பி - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா, சதாசிவம், தெய்வானை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன் (கனடா), தவமணி (கனடா), பவானி (இலண்டன்), ரவீந்திரநாதன் (கனடா), நகுலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜாதா, சிவமோகன், சிவபாலன், சஜீ, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபனா, திபாகர், ராவீசன், சாம்பவி, காயத்திரி, ஐங்கரன், ஆதி, தாரகன், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-09-2025 புதன்கிழமை அன்று மாலை 17:00 - 21:00 மணிவரையும், 04-09-2025 வியாழக்கிழமை காலை 08:00 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2025 04:00)