திருமதி. சோமசுந்தரம் லோகேஸ்வரி

சோமசுந்தரம் லோகேஸ்வரி

தோற்றம்: 20 மே 1953 - மறைவு: 25 ஜனவரி 2025

வவுனியா சமளங்குளத்தை பிறப்படமாகவும், மாதகல் வடக்கு  மற்றும் வவுனியா சமளங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் லோகேஸ்வரி அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசிதம்பரம் - மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ் சென்றவர்களான அம்பலவாணர் - வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின்  ஆருயிர் மனைவியும்,

அருள் சுகந்தன் (பிரித்தானியா), சயந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

மாதினி, தில்லை முருகதாசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

கங்கா சுதந்தரி, சாய் லகரி, பால  சுயம்பரி, சரணி, திருஷன் ஆகியோரின் பேத்தியும்,

நற்றவ மலர், நாகேஸ்வரி (ஓய்வு பெற்ற பிரதி  கல்வி பணிப்பாளர் - வவுனியா), தவவிக்னேஸ்வரி, காலன்சென்ற சிவஞானேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சர்வேஸ்வரி (ஆசிரியை - வவுனியா இந்து கல்லூரி), சிவபாதமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சமளங்குளம்  இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அஞ்சலிகள் அக்கா. குடும்பத்தினருக்கும் சகோதரிகளுக்கும் துயர் பகிர்கின்றேன்"
- Mrs. ARUNTHATHIDEVI RATNASINGHAM (Batticaloa, 03/02/2025 03:46)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2025 05:00)