திரு சோமசுந்தரம் மகேஸ்வரன்
தோற்றம்: 16 ஏப்ரல் 1951 - மறைவு: 29 ஜனவரி 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Épinay-sur-Seine பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் மகேஸ்வரன் அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - கமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவபுஸ்பம் (புஸ்பம் - பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா (லண்டன்), வைஸ்ணவி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
நிஷாந்தன் (லண்டன்), கஜாணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேன், கம்சி (லண்டன்), கவி, ஆதிரா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
மனோகரன் (மணி-இலங்கை), மகேந்திரன் (இந்திரன்-பிரான்ஸ்), புவனராணி (ராணி-பிரான்ஸ்), விமலராணி (விமலா-பிரான்ஸ்), விஜயகுமார் (குமார்-பிரான்ஸ்), ஜெயகுமார் (ஜெயா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராசா (சிவா), சிவானந்தராசா (இலங்கை), காலஞ்சென்ற சத்தியபாமா (பாப்பா), சிவசோதி (கனடா), சிவகௌரி (இலங்கை), சிவகுமாரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
