Mr. Somasundaram Saravanabavananthan (Ananthan)
Date of Birth: 20 November 1947 - Deceased: 11 January 2024
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சரவணபவானந்தன் அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் அதிபர் - யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீசித்தி விநாயகர் வித்தியாலயம்) - யோகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (கணக்காளர்) - பார்வதிப்பிள்ளை தம்பதியினிரின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துவாரகா, நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஞ்சீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசலெட்சுமி, சுந்தரம்பாள், காலஞ்சென்ற விவேகானந்தன், பங்கையற்செல்வி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினசோதி, ஞானசோதி, யோகம்மா, பொன்னம்மா, முருகானந்தவேல், செல்வராணி, கிருபானந்தவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சபாரெத்தினம், நாகலிங்கம் மற்றும் கதிர்காமராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சீவரெத்தினம், மெய்கண்டமூர்த்தி, இராசரெத்தினம், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கமலாதேவி, தேவிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
