திரு. சோமசுந்தரம் சண்முகராஜா
தோற்றம்: 24 மார்ச் 1951 - மறைவு: 06 ஜூன் 2025
யாழ். மருதனார்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சண்முகராஜா அவர்கள் 06-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராசம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
றுஜாந்தி (கனடா), றுஜான் (அவுஸ்திரேலியா), றுஜானி (டென்மார்க்), றுஜாந்தன் (கனடா), றுஜாந் ஆகியோரின் அன்பு தந்தையும்,
குணபரன் (கனடா), அனோஜன் (டென்மார்க்), கனிமொழி (அவுஸ்திரேலியா), சுகன்யா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சய் (கனடா), அனிஷ் (கனடா), ஆருஷா (டென்மார்க்), அனிக்ஷா (டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுந்தர்ராஜா, கமலாதேவி, சுவர்ணலதா, பவானி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாலன், சிவானந்தராஜா, கோடிஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
