திரு. சோமசுந்தரம் ஶ்ரீரஞ்சன்
மறைவு: 05 ஜூலை 2025
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளைவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஶ்ரீரஞ்சன் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் , காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன் (இலண்டன்), திருமுருகன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜரூபி (இலண்டன் ஆவரங்கால் ஒன்றிய விழாக்குழு உறுப்பினர்), சியந்தி ஆகியோரின் மாமனாரும்,
அக்ஷரா, ஆரணிகா, சாத்விகா, யாதேவ் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
