திரு. சோமசுந்தரம் தவயோகன் (பவா)

சோமசுந்தரம் தவயோகன் (பவா)

தோற்றம்: 22 ஏப்ரல் 1947 - மறைவு: 14 மே 2025

யாழ். கரம்பன் கிழக்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கு, கொழும்பு - கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் தவயோகன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,

சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருத்திகா, நதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிஷோகுமார் (துபாய்), கீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கமலநாதன், லோகநாதன் மற்றும் குலநாதன், மீனலோஷினி வசந்தா, கனகநாதன் (குமரன்), அம்பிகா, லிங்கநாதன், செல்வி, ராசாத்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

றோகினி, தவநேசன், சாந்தினி, பத்மினி ஆகியோரின் அன்பான மைத்துனரும்,

ஆஷ்கா, அனேரா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை அன்று பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2025 04:00)