Mrs. Somasundarampillai Vasanthadevi
Date of Birth: 27 October 1944 - Deceased: 16 July 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் புத்தானம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், இல-70/3, Marigold, புதுச்செட்டித்தெரு, கொழும்பு-13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த குருவலுவுடைமான் கோத்திரம் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை அவர்களின் மனைவி திருமதி. வசந்தாதேவி அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இரவு 11:25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கபுரம் மருதப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் மகளும், புத்தானம்பட்டி காலஞ்சென்ற வைத்திலிங்கம்பிள்ளை - சியாளம்மை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற துரைசாமி சிவபாக்கியத்தின் சகோதரியும்,
சந்திரமோகன், சிவகாமி, யோகேஸ்வரி (வெஸ்லிக் கல்லூரி, ஹவ்லொக் டவுண்), இளங்கோ, சந்திரன் ஆகியோரின் தாயாரும்,
லெ.நாகேந்திரன் (துரை), சோ. ராஜகுமார், அபினா, துஷியந்தி ஆகியோரின் மாமியாரும்,
பவித்ரா, கைலாஷ் ஆகியோரின் அம்மாயியும்,
கோகுல், பிரவீன் ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை அன்று காலை 7:30 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
