Mr. Somasundaram Sivarajah
(இலங்கை வங்கி முன்னாள் முகாமையாளர்)
Deceased: 28 January 2026
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் சிவராஜா அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை உடையார் - தங்கம் உடைச்சி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற தபாலதிபர், பதிவாளர்) - ஞானமணி (ஓய்வுபெற்ற தபாலதிபர்) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா (முகாமையாளர் - காந்தி பண்டசாலை) - இவட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன் (FCCA), குலோதுங்கன் (சட்டத்தரணி), பூர்ணிமா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ஞானராஜா, சுந்தரராஜா, செல்வராஜா மற்றும் ஜோஸ்வரி (கனடா), ரதிதேவி (இலண்டன்), லோகராஜா (இலண்டன்) ஆகியோரின் அன்பு தம்பியும்,
சுவர்ணா, ரவிப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, சேதுப்பிள்ளை, கனகம்மா, நாகரத்தினம், வைத்திலிங்கம், சுவாமிநாதன் மற்றும் தங்கமுத்து (இலண்டன்), திருநாவுக்கரசு (இலண்டன்), குணசிங்கம் (இலண்டன்), ராஜராஜேஸ்வரி (நோர்தம்ப்டன்), காலஞ்சென்ற குணவதி, கணேஷ்குமார் (யாழ்ப்பாணம்), இராஜேந்திரன் (இலண்டன்), நகுலேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஹில்குமாரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 - 12.00 மணி வரை Belmont Community Hall (Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ) இல் நடைபெற்று, பிற்பகல் 02.00 மணியளவில் திருவுடல் Hendon Crematorium (Holders Hill Rd,London NW 7 1NB) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
