திரு. சூரியகுமார் செல்லத்துரை

சூரியகுமார் செல்லத்துரை

தோற்றம்: 10 மே 1951 - மறைவு: 29 நவம்பர் 2024

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூரியகுமார் செல்லத்துரை அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை -ருக்மணி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை-நாகரெட்ணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பாலசோதி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற ஜெய்பிரதீஸ், சர்மிளா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

றியா அவர்களின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற விஜயரெட்ணம் (இலங்கை), கனகரெட்ணம் (கனடா), காலஞ்சென்ற துரைரெட்ணம் (கனடா), சத்தியநாதன் (கனடா), காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (ஜேர்மனி), சந்திரகுமார் (கனடா), செல்வகுமாரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச்  சகோதரரும்,

காலஞ்சென்ற புஸ்பாதேவி (இலங்கை), நேசமலர் (கனடா), ரெஜினா (அவுஸ்திரேலியா), இந்திரா (கனடா), சந்திராதேவி (ஜேர்மனி), கோமதி (கனடா), பாலேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  கருணாகரன் (இலங்கை), சண்முகராஜா (இந்தியா), இராமநாதன் (இலங்கை), தவமணி (இலங்கை) மற்றும் கணநாதன் (ஜேர்மனி), இராசநாயகி (இலங்கை), கெங்காதரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,

காலஞ்சென்ற பூமணி (பிரான்ஸ்), பிறேமா (இந்தியா), சந்திராதேவி (இலங்கை), அருளானந்தம் (இலங்கை), இந்திராதேவி (ஜேர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம் (இலங்கை), தமயந்தி (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 - 3:30 மணி வரை (Barnet Multi Cultural Community Centre Ltd - Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் (Hendon Cemetery & Crematorium South Chapel - Holders Hill Rd, NW7 1NB, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.     

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2024 05:00)