திரு. சூரியமூர்த்தி ஹரீந்திரன்

(B.SC (SL), M.SC (SL), LLB, LLM(UK), Attorney at Law (R), Director & Founder INSIV GLOBAL (PVT) LTD, INSIV CAMPUS (PVT) LTD & INSIV TRAVELLERS HUB (PVT) LTD, Former Assistant Director, Regional Office)

சூரியமூர்த்தி ஹரீந்திரன்

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1983 - மறைவு: 24 மே 2026

மட்டக்களப்பு - காரைதீவைப் பிறப்பிடமாகவும், பூம்புகாரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சூரியமூர்த்தி ஹரீந்திரன் அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூரியமூர்த்தி - சுதாமதி தம்பதியினரின் அன்பு மகனும், நந்தகுமார் - வான்மதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வெரோணிகா மின்னொளி (விரிவுரையாளர் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நெவின் அஷ்வதீரனின் அன்புத் தந்தையும்,

ஹாயத்திரி, மயூரன், உமாமகேஸ்வரி (இலண்டன்), உதயராகேஸ் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

திலீபராஜ் (இலண்டன்), ஜோர்ஜ் அமலன் (கனடா), ஸ்கொலஸ்டிகா அமலினி (கலாச்சார உத்தியோகத்தர் - கலாச்சார மத்திய நிலையம், மண்முனை வடக்கு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜித்தா ஜோர்ஜ் அமலன், ரஞ்சித்குமார் (மட்.பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயம்) ஆகியோரின் உடன்பிறவா அன்பு சகோதரரும்,

மோகன் (டென்மார்க்) அவர்களின் அன்பு மருமகனும்,

கனிஸ்ரீ (இலண்டன்), வருண் வினாயக் (இலண்டன்), கோசிக் வினய் (இலண்டன்), சேஷ்னா, சயோனா, ஆரோன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சகாஸ் (இலண்டன்), ரியன்னா சன்யா, ஜெயிலின் பிரகன்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-05-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 515/58, 6ம் குறுக்கு,

பூம்புகார், மட்டக்களப்பு.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2026 00:00)