Mr. Soosaipillai Benedict (Cyril)
(Owner, Leyden Textile Center, Jaffna)
Date of Birth: 14 February 1937 - Deceased: 25 September 2024
யாழ். கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பெனடிக்ட் அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை-ஆரோக்கியம் (இராசம்மா) தம்பதியினரின் அன்பு புதல்வரும்,
காலஞ்சென்ற கிறீஸ்சோஸ்ரொம் பொன்ராசா-எலிசபெத் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜீலியட் ஜெயசீலி அவர்களின் அன்புக் கணவரும்,
பீற்றர் ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா), ஜெயந்தினி (இலண்டன்), அன்டனி ஜெயந்திரன் (இலண்டன்), ரூபினி டேவிற் (கொழும்பு), வதனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
பியூமா (அவுஸ்திரேலியா), பிலீப் கொன்ஸ்ரன்ரைன் (சுரேஸ்-இலண்டன்), ஜெனி (இலண்டன்), ஜீவன் (கொழும்பு), தனு ஜோசப் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வைலட், லீடா (கிளி), சிசிலீயா (சாளற்-சுவிஸ், அருளானந்தம் டொமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசா, மரியதாசன், மரியநாயகம், காலஞ்சென்றவர்களான புளோரன்ஸ் விமலா, ஜோசப் அன்டன் மற்றும் கிளினேற், பிலீப் ஜெயராஜ், அலிஸ்ரன் தேவராஜ் (ஜேர்மனி), இம்மானுவேல் அருள்ராஜ் (ஜேர்மனி), ஆன் திரநெற் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோஷ்சுவா, ஜொகானா, கிறேஸ், கிடியான், பெஞ்சமின், ஹானா, வில்லியம், மரியா, ரவீன், தீனா, கவீன், கிரீஸ்டின், மரியன், டானியெல் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 30-09-2024 திங்கட்கிழமை முதல் 27, Swartz Lane, Chundukkuli, Jaffna உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் புனித திருமுழுக்கு யோவான் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதன் பின் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
