திரு. சூசைப்பிள்ளை ஞானபிரகாசம் (ஞானம்)

(Founder of Gnanam's Studio and Hotel Gnanams-Jaffna)

சூசைப்பிள்ளை ஞானபிரகாசம்  (ஞானம்)

தோற்றம்: 18 டிசம்பர் 1928 - மறைவு: 04 நவம்பர் 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஞானப்பிரகாசம் சூசைப்பிள்ளை அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிரேஸ் ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புக் கணவரும்,

சாம்சன்ராய், கலாஜோதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசீலன், இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டைரோன், ஷிரானி, ஜொனாதன், காலஞ்சென்ற சாமந்தி மற்றும் பிந்து ஆகியோரின் அன்புப் பேரனும்,

நவீனா, தீரன், சூரியா, கதிரவன், ஜோவனி, எவானி, பிராண்டன், சியன்னா மற்றும் சனாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை நிகழ்வுகள் 16-11-2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1.00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பிற்பகல் 2.15 மணியளவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"அன்னாரின் ஆத்துமா சாந்திஅடைய எங்கள் குடும்பம் சார்பாக எல்லாம்வல்ல இறைவனை பிராத்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எங்கள் அனுதாபத்தை தெரிவிகப்பதுடன் இறைவன் அவர்களுக்கு உறுதுனையாக இருப்பாராக அழகு பொன்னுத்துரை ஜெயா குடுப்பத்தினர் "
- Jeya Ponnudurai (Sweden , 10/11/2024 22:42)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2024 05:00)