திருமதி. சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 30 ஜூன் 1940 - மறைவு: 10 ஜூலை 2026
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் -Paris, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதா, காலஞ்சென்ற பார்த்தீபன் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோகரதாஸ். ஜெயமதி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிலானி, அபிரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
நிவேதா, மிதுலா, ஆகாஷ், அஸ்வின் ஆகியோரின் அப்பம்மாவும்,
இராசலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்பிரமணியம், வில்வரட்ணம், இராசரட்ணம், சிவஞானம், ராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராசா, சரவணமுத்து மற்றும் திருநாவுக்கரசு, நவமணி, கேசவராணி, சச்சிதானந்தன், குலேந்திரன், காலஞ்சென்ற வரதராஜா, புஸ்பராணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வன், திருக்குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
